ஈஸ்டர் தற்கொலைதாரியின் திருமண சாட்சியத்தில் ரிஷாத்தின் கையொப்பம்! - இதனை தானே ஒப்புக் கொண்ட ரிஷாத்!

ஈஸ்டர் தற்கொலைதாரியின் திருமண சாட்சியத்தில் ரிஷாத்தின் கையொப்பம்! - இதனை தானே ஒப்புக் கொண்ட ரிஷாத்!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான இன்ஸாப் அஹமட்டின் திருணத்திற்கு ரிஸாட் பதியூதின் சாட்சிக் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை நேற்று நடைபெற்ற விசாரணையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.


$ads={2}


கொழும்பு மகஸின் சிறையில் இருந்தவாறு ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் சாட்சியமளித்தபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் பலதடவை இன்ஸாப் தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்திருந்தாலும் தான் அவர் தற்கொலை குண்டுதாரியாக மாறிவிடுவார் என நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிக்க அப்போதைய இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவுக்கு தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் தாம் நிராகரிப்பதாக ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post