இலங்கையில் நேற்று தான் அதிகளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகள்!

இலங்கையில் நேற்று தான் அதிகளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகள்!


நாட்டில் நேற்றைய தினம் அதிகளவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 11,999 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
$ads={2}
கொரோனா தொற்றினை அடையாளம் காண பெப்ரவரி முதல் நேற்று வரையான காலப் பகுதியில் இலங்கையில் மொத்தம் 512,735 பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று மொத்தமாக 239 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 89 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 28 பேர் இரத்னபுரி மாவட்டத்திலும், 21 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 20 பேர் களுத்துறை மாவட்டத்திலும் 11 பேர் வவுனியா மாவட்டத்திலும், 10 பேர் கேகாலை மாவட்டத்திலும், 4 பேர் காலி மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து 59 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். YazhNews

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.