தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் மரணங்களைப் பற்றி பேச வேண்டியேற்படும்! -GMOA

தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் மரணங்களைப் பற்றி பேச வேண்டியேற்படும்! -GMOA

நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்த போக்கை காண்பிக்கிறது. இவ்வாறான நிலையில் அவதானமிக்க பகுதிகளை அடையாளப்படுத்தாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்துவதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

$ads={2}

அண்மையில் வீடுகளிலேயே இறந்த சிலருக்கு முதலாவது பரிசோதனையில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவும் உயிரிழந்ததன் பின்னர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற முடிவும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலைமை தொடருமானால் தற்போது தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் மரணங்களைப் பற்றி பேச வேண்டியேற்படும். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு சமூகத்திலிருந்து வைரஸ் தொற்று ஏற்படவில்லை. மாறாக வீட்டுக்குள் வைரஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post