கொரோனா தடுப்பூசி - இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் பங்களாதேஷ்!

கொரோனா தடுப்பூசி - இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் பங்களாதேஷ்!

இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள பங்களாதேஷ் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரிட்டனின் AstraZeneca நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசிகளை இந்தியாவின் Serum கல்விக்கழகமும் இணைந்து சோதித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி AstraZeneca நிறுவனத்தின் தடுப்பூசி நோய்த்தொற்றுக்கு எதிராக நல்ல பலனைக் கொடுத்துவருகிறது.

$ads={2}

தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தால் முதற்கட்டமாக Serum கல்விக் கழகத்திடமிருந்து 30 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளப்போவதாக பங்களாதேஷ் கூறியது.

இந்தியாவிடமிருந்து கிடைக்கும் தடுப்பூசிகளை, 28 நாளுக்கு ஒன்று வகையில் 15 மில்லியன் பேருக்கு இரண்டு முறை விநியோகிக்க முடியும் என்றும் அது தெரிவித்தது.

மேலும் தடுப்பூசிகள் வாங்க உலக வங்கியிடம் பங்களாதேஷ் நிதி உதவி கேட்டுள்ளது.

பங்களாதேஷில் COVID-19 நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.

தற்போது அங்கு 416,006 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 6,021 பேர் இறந்துமுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post