பொலிஸ் அதிகாரியை அறைந்த திரைப்பட நடிகர்!

பொலிஸ் அதிகாரியை அறைந்த திரைப்பட நடிகர்!

சிங்கள திரைப்பட நடிகர் வில்சன் கருணாரட்ன, காவல்துறை அலுவலர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே கைது செய்யப்பட்டதாக காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

கிருலப்பனையில் வைத்து முகக்கவசம் அணியாமைக் காரணமாக அவர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


$ads={2}

இது குறித்து தகவல் அளித்துள்ள காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன, முகமூடி அணியாமை குறித்த காவல்துறை உறுப்பினர் நடிகரிடம் வினவியபோது அவர் காவல்துறை உறுப்பினரின் கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்தே நடிகர் வில்சனை கைது செய்ததாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நடிகரால் தாக்கப்பட்ட காவல்துறை உறுப்பினர் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post