மாவட்டங்களுக்கு இடையிலேயான போக்குவரத்து இடைநிறுத்தம்!

மாவட்டங்களுக்கு இடையிலேயான போக்குவரத்து இடைநிறுத்தம்!


பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களினுள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைக்கமைய அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதேவேளை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தவிர்க்கும் வகையிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.


கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடன் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post