நாடாளுமன்றில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களின் மேலுமொருவருக்கு தொற்று உறுதி!

நாடாளுமன்றில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களின் மேலுமொருவருக்கு தொற்று உறுதி!


நாடாளுமன்றத்துக்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஒரு ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதன்படி நாடாளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.


இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவராவார். ஆங்கிலப் பத்திரிகையை சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் முதன்முதலாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். .


$ads={2}


அவருக்குப் பின்னர் இரண்டு சிங்கள பத்திரிகைகளைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கும், தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்த ஓர் ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்றக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.


இவர்கள் அனைவரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதம், வாக்கெடுப்புகளை செய்தியாக அறிக்கையிடச் சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post