பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

பேலியகொடையில் அமைக்கப்பட்டுள்ள  புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள்  இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படுமென நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசணைக்கமைய புதிய மெனிங் சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் என்.பி.கே. ரனவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த தினத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வர்த்தகர்களைக் கொண்டு அனைத்து வகையான வியாபார நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

அத்துடன், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய ஏனைய வர்த்தகர்களை சந்தை வளாகத்திற்குள் அனுமதிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

புறக்கோட்டை மெனிங் சந்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 100 பேர் அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து, மெனிங் சந்தையை பேலியகொடை பகுதிக்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, பேலியகொடை பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post