இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்சாவின் குற்றங்கள் நிரூபம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்சாவின் குற்றங்கள் நிரூபம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா மீதான மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ICC தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 2018இல் ICC ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொய்சா மீது குற்றம் சாட்டப்பட்டது.

$ads={2}

மேலும், அவர் ஒரு தீர்ப்பாயத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகிய பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சொய்சாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்பதுடன் எதிர்வரும் நாட்களில் அவருக்கான கூடுதல் தடைகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post