பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரணம்!

பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரணம்!


கிளிநொச்சியை சேர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 இல் லாஸ்லியா கலந்து கொண்டு மிகவும் பிரபலாமானர்.

இலங்கையின் பிரதான ஊடகம் ஒன்றின் செய்தி வாசிப்பாளரான இவரின் தமிழ் உச்சரிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

$ads={2}

இவரின் தந்தையான மரியநேசன் வெளிநாட்டில் வசித்து வருவதாக அந்த நிகழ்ச்சியில் மூலம் தெரியவந்தது. பின்னர் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தன் மகளான லாஸ்லியாவை பார்த்துவிட்டு சென்றார்.

தற்போது லாஸ்லியா படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் தந்தையான மரியநேசன் வெளிநாட்டிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post