பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Embassy of Sri Lanka in France - Yazhnews
பிரான்ஸில் செயற்படும் இலங்கை தூதரகம் தமது செயற்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் அமுலிலுள்ள உள்ளிருப்பு நடைமுறை காரணமாக, தமது தூதரக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பாரிஸில் செயற்படும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய நவம்பர் 13ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையான 14 நாட்களுக்கு தூதரகம் மூடப்பட்டிருக்கும்.


இந்தக் காலப்பகுதியில் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்ப அனுமதிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.


$ads={2}


தூதரக சேவைகள் தொடர்புடைய அறிவுறுத்தல்களை பெற தூதரக வலைத்தளத்தை பார்வையிட முடியும்.


அவசர கொன்சுலர் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான சேவைகளை தொலைபேசி இலக்கம் அல்லது குறுந்தகவல்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post