இலங்கையில் இணையதளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மேற்கொள்ளப்படவுள்ள திட்டம்!

இலங்கையில் இணையதளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மேற்கொள்ளப்படவுள்ள திட்டம்!


இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டமொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வகுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


நேற்று (21) நாடாளுமன்றில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


$ads={2}


நாட்டு மக்களின் கௌரவத்தை பாதுகாக்க மற்றும் மதங்களுக்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இடும் இனணயத்தளங்கள் குறித்தும் ஆராயப்படும் என்றார்.


மேலும், ஊடகவியலாளர்களுகான காப்பீட்டு திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post