மேலும் இரு அமைச்சகம் உருவாக்க அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

மேலும் இரு அமைச்சகம் உருவாக்க அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!


அமைச்சரவையில் மேலும் இரண்டு அமைச்சுக்களை உருவாக்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.


நவம்பர் 20ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இன்று (22) வெளியிடப்பட்டது.


பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சை உருவாக்குவதற்கான வர்த்தமானியே இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதேவேளை, புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்ஷ இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


$ads={2}


அனேகமாக அவருக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.


அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் பாராளுமன்ற உறுப்பினராகலாம் என்ற சரத்தும் நிறைவேற்றப்பட்டது.


பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றம் கொண்டுவரும் நோக்கிலேயே இந்தத் சரத்து உள்ளடக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post