மேல் மாகாணத்திலிருந்து வெளியேறத்தடை!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறத்தடை!

மேல் மாகணத்தில் இருந்து வெளி மாகணங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

உடன் அமுலாகும் வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடையானது எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்குமெனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொது மக்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

$ads={2}

இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்களும் வெளிப் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளுதல், பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், உறவினர்கள் ஒன்று கூடுதல் போன்ற சம்பிரதாய நடைமுறைகளை இந்தமுறை தீபாவளி பண்டிகைக் காலத்தில் தவிர்த்து செயற்படுமாறும் சுகாதாரத் துறையினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post