
நீர் பாவனையாளர்களுக்கு தமது கட்டணப் பட்டியல்களை செலுத்த சலுகைக்காலம் வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் அல்லது முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்களுக்கே இவ்வாறான சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
$ads={2}
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்வாறான பகுதிகளில் இருக்கும் நபர்களுக்கு தமது கட்டணப் பட்டியலை செலுத்த முடியுமான காலப்பகுதியில் அதனை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.