மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத விதத்தில் இலங்கை அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள்!

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத விதத்தில் இலங்கை அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள்!


மக்களின் வாழ்வாதாரத்துக்கும்  பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் போக்குவரத்து பிரவேச அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாம் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை  முறையாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.


கொரோனா வைரஸ்  ஒழிப்பு செயலணியினருக்கும் ஜனாதிபதிக்கும் இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


$ads={2}


மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு  தலா 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.


வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு PCR பரிசோதனைகளை முன்னெடுக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என பெறுபேறு கிடைக்கும் போது அவர்களை 14 நாட்களுக்கு பிறகு சமூகத்தில் செயற்பட அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post