பொதுமக்களுக்காக இராணுவத் தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை!

பொதுமக்களுக்காக இராணுவத் தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை!

வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியும் அவதானம் செலுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

$ads={2}

அண்மைய நாட்களில் வீட்டில் மரணிக்கின்ற முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படுகின்ற PCR பரிசோதனைகளில் சிலருக்கு கொரொனா தொற்று இருக்கின்றமை தெரியவந்தது.

இந்நிலையில், அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் அவர்களது நலன்தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post