க.பொ.த சாதாரண தர பரீட்சை தினம் குறித்த மீள் பரிசீலனை!!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தினம் குறித்த மீள் பரிசீலனை!!

க.பொ.த சாதாரண தர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் தினத்தை நாம் அறிவித்திருந்தோம். அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.

தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதேபோன்று தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை 2 வார காலத்துக்குள் மேற்கொள்வோம்.

$ads={2}

பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதாயின், மீண்டும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும். 

அதனடிப்படையில், கல்வி க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சையை இந்த பாடசாலைகளில் நடத்த முடியுமா என்ற தீர்மானம் 2 வார காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும்.

மேலும் க.பொ.த சாதாரண தர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்தும் அதாவது, பரீட்சையை நடத்துவது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post