கம்பளையில் உயிரிழந்தவருக்கு கொரொனா? வேகமாக பரவி வரும் போலி செய்தி!

கம்பளையில் உயிரிழந்தவருக்கு கொரொனா? வேகமாக பரவி வரும் போலி செய்தி!

கம்பளை, பிபிலை பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று (01) இரவு திடீரென உயிரிழந்தார்.

இவர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு உயிரிழந்துள்ளார் என்ற வதந்தி கம்பளை பகுதியில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் திடீரென உயிரிழந்த அவரின் ஜனாஸா கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டு பிரதே பரிசோதனையும் PCR பரிசோதனையும் இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

$ads={2}

மேலும் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் எனவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது அவரின் ஜனாஸா உறவினர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. யாழ் நியூஸ்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post