நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்பில் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரம் இருக்கவில்லை! -பவித்ரா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்பில் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரம் இருக்கவில்லை! -பவித்ரா

நாட்டில் இறுதியாக இடம்பெற்ற கொரோனா மரணங்கள் தொடர்பில் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரம் இருக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் அசோகா அபேசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

எம்.பி அசோகா அபேசிங்க - 
இலங்கையில் பதிவாகிய இறுதி மூன்று மரணங்களும், மரணம் இடம்பெற்ற பின்னரே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே வீடுகளில் உள்ளவர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் பரவல் உள்ளது என்பது இதன் மூலமாக வெளிப்படுகின்றது அல்லவா?

பவித்ரா வன்னியாரச்சி
அவ்வாறு இடம்பெறவில்லை. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட.

அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை வீடுகளில் சுய தனிமையில் வைத்திருக்கும் வேளைகளில் அவர்களுக்கு பி.சி.ஆர் எடுத்துப்பார்த்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது தவிர்ந்து வேறு எவருக்கும் தொற்று இருப்பதாக இதில் உறுதியாகவில்லை என்றார்.

எம்.பி அசோகா அபேசிங்க
இறுதியாக உயிரிழந்துள்ள மூன்று நபர்களும் இறந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அதிலும் இறுதி இரண்டு நபர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவும் இல்லை, சாதாரண சிகிச்சை பிரிவில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

பவித்ரா வன்னியாரச்சி -
இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, சுகாதார பணிப்பாளர் இது குறித்து எனக்கு எதுவுமே அறிவிக்கவில்லை.

அதுமட்டுமல்ல இதையெல்லாம் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரமும் இல்லை. நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னரே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தேடிப்பார்த்து கூறுகின்றேன் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.