அசர்பைஜானுடனான போரில் தோல்வியை ஏற்றுக்கொண்டது ஆர்மீனியா!

அசர்பைஜானுடனான போரில் தோல்வியை ஏற்றுக்கொண்டது ஆர்மீனியா!

ஆர்மீனிய பிரதமர் நிகோல் பஸினியன், நாகோர்னோ - கராபாக் மீதான சமீபத்திய போரில் தோற்றதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆர்மீனிய அரசாங்கத்தின் ஜனநாயக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆறு மாத நடவடிக்கையை அவர் வெளியிட்டார்.

நாகோர்னோ - கராபாக் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அசர்பைஜான் மற்றும் ஆர்மீனிய இனங்களுக்கிடையில் கடந்த ஆறு வார காலமாக கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் போரை பேரழிவுகரமான முறையில் கையாண்டதாகத் தெரிவித்து தன்னை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவதை நிகோல் பஸினியன் நிராகரித்துள்ளார்.

$ads={2}

எனினும், ஆர்மீனியாவை உறுதிப்படுத்துவதற்கும் அதன் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் தான் பொறுப்பு என அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யா தலைமையிலான சமாதான ஒப்பந்தத்தின் கீழ், முன்னர் ஆர்மீனியர்களால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அசர்பைஜானிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அசர்பைஜான் படைகள் 1990களுக்கு முந்தைய போரில் இழந்த நிலப்பகுதியை மீண்டும் கைப்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post