கொரோனா மரணங்களை நல்லடக்கம் செய்ய தீவினை தேடும் அரசு?

கொரோனா மரணங்களை நல்லடக்கம் செய்ய தீவினை தேடும் அரசு?

நாட்டில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது எனவும் தொலைவில் உள்ள தீவொன்றில் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனவே சடலங்களை அடக்கம் செய்வதற்கு அவ்வாறான தீவொன்றை கண்டுபிடிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான இறுதி முடிவை சுகாதார அதிகாரிகளே எடுப்பார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகர புறங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைப்பது சாத்தியமில்லாவிட்டால் தொலைதூரத்தில் உள்ள தீவொன்றில் அவர்களது உடல்களை புதைக்கும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post