
கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சுக்களுக்கான துறைகளின் திருத்தங்களின் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தை கொண்டமைந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.