பாம்பு தீண்டியதால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!

பாம்பு தீண்டியதால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!


முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


இன்று (21) நள்ளிரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிக்கப்படுகிறது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post