ஜீப் ரக வாகனம் விற்பனை நிலையம் மீது மோதி விபத்து; சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் மகள் பிணையில் விடுதலை!

ஜீப் ரக வாகனம் விற்பனை நிலையம் மீது மோதி விபத்து; சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் மகள் பிணையில் விடுதலை!


பொறுப்பற்ற முறையில் ஜீப் ரக வாகனத்தில் அதி வேகத்துடன் பயணித்ததன் காரணமாக கொழும்பு 07 இல் அமைந்துள்ள தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை காட்சியகம் ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் மகள் இன்று (18) நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.


இதன்போது அவரை 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


இதன்போது சந்தேக நபருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது தெரிந்தும், அவருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு வழங்கிய குற்றத்திற்காக மேலுமொரு நபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.


$ads={2}


இந்நிலையில், குறித்த விபத்து காரணமாக தமது நிறுவனத்திற்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விபத்தின் மூலம் சேதத்திற்குள்ளான மகிழூர்தி காட்சியகம் சார்பில் முன்னிலையாகியிருந்த வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்தார்.


விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், சந்தேக நபரான ஹிரோக்ஷி காஹிங்கலவை பிணையில் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கினார்.


மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினத்தில் வழக்கு தொடர்பிலான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post