முஸ்லிகளின் தேகத்தை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது! ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே அரசுக்கு பரிந்துரை!

முஸ்லிகளின் தேகத்தை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது! ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே அரசுக்கு பரிந்துரை!

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என  இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியை மெத்திகா விதானகே குறிப்பிட்டுள்ளார்.


எமது நாடு கிணற்று நீரை பாவிக்கும் நாடாகும். அடக்கம் செய்ய அனுமதிக்கும் நாடுகளில் கிணற்று நீரை பாவனைக்கு எடுத்துக்கொள்வதில்லை.


கொரோனா வைரசினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாடடையும் என்றே நாம் நம்புகிறோம்.


அந்த மாசடையும் நீரை அருந்தினால் எமக்கு நோய் ஏற்படாது என்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை.


$ads={2}


இது தொடர்பில் விஞ்ஞான ரீதியில் பரிசோதனை மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என துறைசார் நிபுணர்கள் என்ற வகையில் தாம் அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, கொரேனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யதால் மையவாடிகளின் மண், நீர் மற்றும் சூழல் மாசடைவதால் மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் நிலைமை ஏற்படலாம் என அவர் எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார். 


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post