கொழும்பிலிருந்து மலையகம் வந்த சிகை அலங்கார நபருக்கு கொரோனா - தனது வீட்டில் வைத்து பலருக்கு தலைமுடியும் வெட்டியுள்ளார்!

கொழும்பிலிருந்து மலையகம் வந்த சிகை அலங்கார நபருக்கு கொரோனா - தனது வீட்டில் வைத்து பலருக்கு தலைமுடியும் வெட்டியுள்ளார்!


கொழும்பு மருதானை, கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து மலையகம் வந்த 38 வயதுடைய ஒருவர் நேற்று (18) நடாத்தப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பொது சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார ஆய்வாலர்கள் உறுதி செய்தனர்.

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தில் பணிபுரிந்த கொரோனா தொற்றுக்கு இலக்காகிய குறித்த பெண், கடந்த மாதம் 22 ஆம் திகதி ஹட்டனின் கொட்டகலை, டெரிக்லெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார்.


$ads={2}


பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து திம்புல பொலிஸார் அல்லது பொது சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதோடு தோட்டத் தொழிலாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் பலரின் தலைமுடியை வெட்டியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலை முடி வெட்டப்பட்ட ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன .

கொரோனா தொற்றுக்கு இலக்கான நபரை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்வதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post