நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை!

நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை!


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (18) நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


$ads={2}


கொரோனா வைரஸ் தடுப்பு விசேட செயலணிக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post