வெற்றியை அன்மித்துள்ள ஜோ பைடன்!!

வெற்றியை அன்மித்துள்ள ஜோ பைடன்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி ஜோ பைடன் வெற்றிக்கு மிகவும் அண்மித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்தவற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றிருந்தது.

$ads={2}

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெளியாகியுள்ள முடிவுகளின் படி ஜோ பைடன் முன்னிலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனக்கு எதிராக போட்டியிட்டுள்ள ஜோ பைடன் மோசடி செய்திருப்பதாக சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப்,

“நாங்கள் தான் வெற்றி பெறுவோம். வெளிப்படையாக வெற்றி பெறுவோம். நாட்டின் நன்மை தான் முக்கியம். ஜோ பைடன் தேர்தலில் மோசடி செய்துள்ளார்.

சட்டத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post