அமுலாகிய அதிரடி சட்டம் - டி.ஐ.ஜி அஜித் ரோஹன

அமுலாகிய அதிரடி சட்டம் - டி.ஐ.ஜி அஜித் ரோஹன

கடந்த நான்கு நாட்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (15) வரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளின் எல்லைகளை கண்காணிக்க பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பணிகளுக்காக மேல் மாகாணத்திற்குள் நுழையும் நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு வரை மாகாணத்திற்குள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அல்லது மறு நாள் (16) மாகாணத்திற்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள அனைத்து ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் லாட்ஜ்களின் நிர்வாகங்களுக்கி இன்று (12) முதல் ஞாயிற்றுக்கிழமை (15) வரை வரும் மேல் மாகாணத்திலிருந்து வருபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த நபர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது குடும்பத்தினரை மற்ற மாகாணங்களுக்கு பார்வையிட வருபவர்கள் பொலிஸாருக்கு முன்னறிவித்தல் வழங்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னர் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது மாகாணங்களுக்கு இடையே செல்ல, அங்கீகரிக்கப்பட்ட 112 தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் ஊழியர்களின் நிறுவன அடையாள அட்டை,  அடுத்த 4 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க செல்லுபடியாகாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உணவு மற்றும் மருந்து விநியோக சேவைகள், மருந்தகங்கள், நீர், மின்சாரம், எரிசக்தி மற்றும் பெட்ரோலியத் துறைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post