
இந்த பிரதேசங்களுக்கு முதல் கட்ட மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முப்படையினரும், பொலிசாரும் தயார் நிலையில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவத்தின் பொது முகாமையாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

