அக்குறணை கொரோனா நிலவரம் குறித்து பிரதேச சபை தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி!

அக்குறணை கொரோனா நிலவரம் குறித்து பிரதேச சபை தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி!


அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்ததல் பிரதேசமாக பிரகடனம்.


அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று வரை 39 ஆக அதிகரித்துள்ளமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 90 காணப்படுகின்றமை என்பனவற்றை கவனத்திற்கொண்டு அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு மக்களின் சுகாதார நலன் கருதி நேற்று (24) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்ததல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.


தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பிரதேச வாசிகள் அப்பிரதேசங்களை விட்டும் வெளியேரவோ அல்லது இப்பிரதேசத்திற்கு எவரும் நுளையவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன் குறித்த பிரதேசத்தினுள் சுகாதார முறைப்படி அன்ராட இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதில் எந்தவித தடையுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அக்குறணை பிரதேச செயலகப் பிரிவின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் தனிமைப்படுத்துவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அக்குறணை பிரதேச மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபை தவிசாளர் குறிப்பிட்டார்.


$ads={2}


கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு சுகாதார துறையினால் கூறப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் அக்குறணை பிரதேச மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அக்குறணை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பிரதேச மக்கள் அனைவரும் பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதார துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post