
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வீட்டின் செட் சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்தில் போடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இரு தினங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழந்துள்ளது.
வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிக்பாஸ் போட்டியாளர்கள் பீதியடைந்தனர்.
நாங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடுகிறோம், ஆளை விடுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமையை உணர்ந்து கொண்ட சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களை நேற்று பாதுகாப்பாக அழைத்து சென்று தங்க வைத்துள்ளது.
தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறும் நிலையில் போட்டியாளர்கள் மீண்டும் இன்றிரவு பிக்பாஸ் வீட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.