கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையம் இன்று திறக்கப்பட்டது!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையம் இன்று திறக்கப்பட்டது!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையம் வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக இன்று(09) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச பணியாளர்களை பயன்படுத்தி மத்திய தபால் பரிமாறல் கடமைகளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆளணியினரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படத்திய மூன்று சந்தர்ப்பங்களில் மூவர் தொற்றுக்குள்ளானதாக பதிவானதையடுத்து இந்த அலுவல்களை முழுமையாக இடைநிறுத்துவதற்கு கடந்த 05 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.


$ads={2}

இந் நிலையில் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையடுத்து, மத்திய தபால் பரிமாற்ற நிலையம் கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு, வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post