கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை!


கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா முதலாவது அலை ஏற்பட்ட கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையில் மக்களுக்கான நிவாரணங்களுக்கு மாத்திரம் 68.64 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் ஜீவனோபாயம் இல்லாமல் போயுள்ள 1 கோடியே 13 லட்சத்து 8 ஆயிரத்து 311 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது,


கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டமையை அடுத்து இந்த ஆண்டின் ஒக்டோபர் மாத்திலும் நவம்பர் மாத்தின் இதுவரையான காலப்பகுதியிலும் 14 லட்சத்து 9 ஆயிரத்து 578 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.


$ads={2}


இதற்கமைய, இதுவரையில் ஒரு கோடியே 27 லட்சத்து 17 ஆயிரத்து 889 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 46 ஆயிரத்து 411 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post