
சமீபத்தில் இடம்பெற்ற ICC கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் ICC போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், U-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ICC உத்தரவு பிறப்பித்துள்ளது.
இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் ஓர் அணி நினைத்தால் எந்த வயதிலும் ஓர் வீரரை அறிமுகப்படுத்த முடியும். அதற்கு ICCயிடம் அந்த அணி அனுமதி பெறவேண்டும். அசாதாரணமான சூழலில் 15 வயதுக்குட்பட்ட வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ICCயிடம் விண்ணபிக்க வேண்டும்.
குறித்த வீரரின் அனுபவம், மனநிலை, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி போன்றவற்றை ICCக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.