
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 6 வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் பலியாகினர்; மேலும் 14 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது.
இந்நிலையில், ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் வியன்னாவில் உள்ள தெஹிட் பள்ளிவாயல் மற்றும் மெலிட் இப்ராஹிம் இஸ்லாமிய சங்கத்தையும் மூடுவதற்கான அறிவிப்பை நேற்று (06) வெளியிட்டார்.
$ads={2}
தேசியப் பாதுகாப்பு காரணமாகவே பள்ளிவாயல்கள் மூடப்படுவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையை இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக கருத தேவையில்லை எனவும் கார்ல் தெரிவித்தார்.
வியன்னா தாக்குதல் சம்பவத்தையொட்டி வியன்னா உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் அறிவித்தார்.