லிபியாவில் இரு படகு கவிழ்ந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 94 பேர் பலி!!

லிபியாவில் இரு படகு கவிழ்ந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 94 பேர் பலி!!


லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரே நாளில் இடம்பெற்ற  இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உயிரிழந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட  குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 


மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட குறித்த விபத்தில் படகு கவிழ்ந்து 74 குடியேற்றவாசிகளை பரிதாபமாக உயிரிழந்தனர். 


இதேபோன்று 50க்கும் அதிகமான குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட மற்றுமொறு படகு, தலைநகர் திரிபோலில் இருந்து வடகிழக்கு பதியில் அமைந்துள்ள சோர்மன் என்ற நகரின் கரையில் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சியோர் அப்பகுதி மீனவர்களால்  மீட்கப்பட்டுள்ளனர்.


$ads={2}


வடஆபிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 


இந்த மோதலில் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்


எனினும் இந்த ஆண்டு இதுவரை மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றனர் 800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.


மேலும் 72,669 பேர்  வெற்றிகரமாக கடலை கடந்து சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post