ஹேஷ்டேக் #5differentlookchallenge சவால்!! இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் விடுத்துள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹேஷ்டேக் #5differentlookchallenge சவால்!! இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் விடுத்துள்ள எச்சரிக்கை!


சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchallenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு புகைப்படங்கள் பிரசுரிக்கப்படுவதால் மூன்றாம் தரப்பினர் இந்த படங்களை துஸ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியங்கள் உண்டு என இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் (ITSSL) தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சிலர் தங்களது படங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.


$ads={2}


ஆகவே முகநூல் ஊடாக ஐந்து வித்தியாசமான படங்களை வெளியிடும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களது புகைப்படங்களை பிரசுரிக்கும் நபர்கள் பிரைவெசி செட்டிங்கில் (privacy settings) நண்பர்களுக்கு மட்டும் என்பதனை தெரிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.


Public என்ற அடிப்படையில் இந்த படங்களை பகிர்வதன் மூலம் சைபர் குற்றவாளிகள் இந்த படங்களை பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த படங்களை பயன்படுத்தி வேறும் சமூக ஊடக வலையமைப்புக்களில் புதிய போலியான ப்ரோபைல்கள் (profiles) உருவாக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முகநூலில் ட்ரெண்ட் செய்யப்படும் எந்தவொரு சவால் என்றாலும் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒன்றியம் கோரியுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.