41 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த 25 வயது வாலிபன்; பொலிஸாரிடம் சரண்!

41 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த 25 வயது வாலிபன்; பொலிஸாரிடம் சரண்!


பொலன்னறுவை நகருக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா தங்குமிட விடுதி ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாவுல லெனதொர, சேருதண்டாபொல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான எம்.எம். கமலா ரஞ்சனி என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


இந்த பெண் மறைமுக தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞனுடன் நேற்று இரவு விடுதிக்கு வந்து அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.


பின்னர் அந்த இளைஞன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் இன்று காலை பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


25 வயதான இந்த இளைஞன் பக்கமுன திக்கல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post