கொரோனா தொற்றுக்கு மேலும் பலர் உறுதி; இன்றைய தினம் 400க்கும் மேற்பட்டோர் அடையாளம்!

கொரோனா தொற்றுக்கு மேலும் பலர் உறுதி; இன்றைய தினம் 400க்கும் மேற்பட்டோர் அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, இன்றைய தினம் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 409 ஆக பதிவாகியது.


தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 05 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 132 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, நாட்டில் தொற்று உறுதியான மேலும் 332 பேர் குணமடைந்துள்ளனர்.


$ads={2}


அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,581 ஆக அதிகரித்துள்ளது.


மேலும், தொற்று உறுதியான 6,140 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.