பாராளுமன்றத்தை நெருங்க முயற்சித்த படகு; ஒருவர் கைது!

பாராளுமன்றத்தை நெருங்க முயற்சித்த படகு; ஒருவர் கைது!


பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஓயாவின் பொல்தூவ பகுதி ஊடாக பாராளுமன்றத்தை நெருங்க முயற்சித்த படகு ஒன்று, பாதுகாப்பு பிரிவினரின் படகுடன் மோதியதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

படகில் பயணித்த மற்றொரு சந்தேக நபரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

$ads={2}

இந்த சம்பவத்தில் காணாமல் போன நபர், புத்கமுவ பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவருகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் தியவன்னா ஓயாவில் மீண்பிடிக்க சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post