கண்டி - கெலிஓயாவில் மகாவலி ஆற்றில் மூழ்கி 23 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

கண்டி - கெலிஓயாவில் மகாவலி ஆற்றில் மூழ்கி 23 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

கண்டி - பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓயா, கல்கமுவ பகுதியில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மொகமட் சுஹைல் (Mohamed Suhail) என்ற 23 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேற்றைய முன்தினம் (03) மாலை 4.00 மணியளவில் கல்கமுவ பகுதியை ஊடறுத்துச்செல்லும் மகாவலி கங்கையில் நீராட சென்றுள்ளார். இதன்போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

$ads={2}

இதனையடுத்து பொலிஸாரும், சுழியோடிகளும், பிரதேச வாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தினர். நேற்று (04) இரண்டாவது நாளாகவும் தேடுதல் தொடர்ந்தது. எனினும் இதுவரை சடலம் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post