பட்ஜெட் 2021: பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பட்ஜெட் 2021: பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை!!


ஒரு தடவை பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினை தடை செய்யுமாறு நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


சுற்றாடல் உணர்திறன் முறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் இதனை தடை செய்யுமாறு முன்மொழிந்துள்ளார்.


இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாசித்து நிறைவு செய்தவுடன், பாராளுமன்றம் நாளை (18) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.