உலகில் ஒவ்வொரு பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா!! - WHO தெரிவிப்பு!

உலகில் ஒவ்வொரு பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா!! - WHO தெரிவிப்பு!

உலகளாவிய ரீதியில் சுமார் 10 பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுவரை மேற்கொண்ட 'சிறந்த மதிப்பீடு' ஒன்றின் படி உலக மக்கள் தொகையில் 10 சத விகிதத்தினர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பதாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரகால திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியன் நேற்று (05) கூறினார்.


தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,


குறித்த அந்த மதிப்பீடானது, 760 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருக்கும், இது உலகில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கையை விட 20 மடங்கிற்கும் அதிகமாகும், மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.


ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் 34 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவின் சிறப்பு அமர்வில் பேசிய ரியான், புள்ளிவிவரங்கள் நாடுகளுக்கு இடையில் வேறுபடுகின்றன, ஆனால் மொத்த மதிப்பீட்டின் படி “உலகின் பெரும்பான்மையானவர்கள் ஆபத்தில் உள்ளனர்” என்று மேலும் கூறினார், “நாங்கள் இப்போது ஒரு இக்கட்டான காலகட்டத்தினை எதிர்நோக்கிச் செல்கிறோம்.” என்றார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post