மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய காவல்துறைப் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
$ads={2}
குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.