தந்தையை கொலை செய்ததாக தகவல் வழங்கிய பெண் கைது!

தந்தையை கொலை செய்ததாக தகவல் வழங்கிய பெண் கைது!


119 என்ற பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைத்து தவறான தகவல் வழங்கிய பெண் ஒருவரை பொல்கஹவெல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பொல்கஹவெல - கோடவெல பகுதியில் வசிக்கும் 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூலை 20ம் திகதி பொல்கஹவெல, கஹவத்தஎல பகுதியில் வசித்த ஒருவரின் மரணம் தொடர்பாக, மகன் தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அந்த பெண் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீதிமன்றின் உத்தரவுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் தொடர்பில் மற்றுமொரு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த நபரின் மரணம் இயற்கையானது என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தொலைபேசி இலக்கத்தினை அடிப்படையாக கொண்டு தவறான தகவல் வழங்கிய பெண்ணை பொல்கஹவெல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post