இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக் காய்ச்சல் - எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு

இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக் காய்ச்சல் - எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு


லெப்டோஸ்பிரோசிஸ்” என்றும் அழைக்கப்படும் எலிக் காய்ச்சலின பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக்காலம் என்றபடியால் எலி காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீர தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் 6096 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லெப்டோஸ்பிரோசிஸின் விளைவாக இலங்கையில் 70 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அளவிலான லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள 1396 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகளில் 1341 இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும்கூறினார்.

லெப்டோஸ்பிரோசிஸால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் அனுராதபுரம், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகியவை அடங்குவதாகவும் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post