
இன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், அதன் வளர்ச்சி நடவடிக்கைகளில் நாட்டுக்கு தொடர்ந்து உதவுவதாகவும் சீனா இதன்போது உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பணியக உறுப்பினர் யாங் ஜீச்சி ஆகியோருக்கு இடையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சீனாவின் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.