பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோள்!

பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோள்!


பொதுமக்கள் தமது பஸ் பயணங்களின் போது தாம் பயணிக்கும் பஸ்ஸின் இலக்கத்தகடு (License Plate) எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.


ஒரு பஸ் பயணி கொரோனா தொற்று சோதனைக்காளாகி இருப்பின் குறித்த பஸ்ஸில் யார் யார் பயணம் செய்தனர் என்பதை அறிய இந்த விபரங்கள் பயன்படும் என அவர் வலியுறுத்தினார்.


பஸ் உரிமையாளர்களுக்கு பஸ்ஸின் இலக்கத்தகடு எண்ணை பஸ்ஸினுள் காட்சிப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post